
பசிலி தலைமறைவாகிவிட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகின.ஆனால், இது தொடர்பாக எ.எஃப்.பி செய்தியாளர்கள் நடத்திய விசாரணையில் பசிலி என்பவர் கலிஃபோர்னியாவைச் சார்ந்த காப்டிக் கிறிஸ்தவர் என்பது தெரியவந்துள்ளது. நகவ்லா பசிலி நகவ்லா என்ற 55 வயதான நபருக்கு, பசிலியைக் குறித்து முதலில் வெளியான தகவல்களுக்கும் பொருத்தம் இருப்பதாக எ.எஃப்.பி கூறுகிறது. ஆனால், பசிலி என்ற பெயரில் தான் தன்னை அறிமுகப்படுத்தவில்லை என்று நகவ்லா கூறுகிறான்.
நகவ்லா பசிலி மீது ஏற்கனவே போலி பெயர்களில் மோசடி நடத்தியது தொடர்பாக வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இறைத்தூதரை அவமதிக்கும் ‘innocence muslims’ என்ற திரைப்படம் 2 மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் வெளியானது. ஆனால், எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவ விஷமி ஒருவன், இத்திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் அடங்கிய 13 நிமிடங்கள் ஓடும் வீடியோவை அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூபில் பதிவு ஏற்ற்றம் செய்துள்ளான். இதனைத்தொடர்ந்து எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பெரும் கொந்தளிப்பு அடைந்தனர். தொடர்ந்து அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன. யூத லாபிதான் இத்திரைப்படத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் ஃப்ளோரிடாவைச் சார்ந்த வலதுசாரி கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸ் இத்திரைப்படத்தை தயாரித்த நபருடன் நெருங்கிய தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் ஒரு சதித்திட்டம் என்று முஸ்லிம் அறிஞர்கள் கூறுகின்றனர். இதனிடையே, திரைப்பட தயாரிப்பாளர் தங்களை ஏமாற்றிவிட்டதாக இத்திரைப்படத்தில் நடித்தவர்கள் கூறுகின்றனர். இத்திரைப்படத்தின் கதையில் மாற்றம் செய்துள்ளார்கள் என்று திரைப்படத்தில் நடித்த சிண்டி லிகோர்ஷியா கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக