கொச்சி:பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆசையை ஊடகங்கள் கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.கேரள மாநிலம், கொச்சியில் நேற்று(வியாழக்கிழமை) நடைபெற்ற உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொன் விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொண்டு ஆற்றிய உரையில் கூறியது: சமூக நல்லிணக்கம், அனைத்துப் பிரிவினருக்கும் இடையேயான நல்லுறவு ஆகியவற்றை வளர்த்தெடுக்க
ஊடகங்கள் முயற்சிக்க வேண்டும். இரு பிரிவினருக்கிடையே நிலவும் பிரச்னை குறித்த செய்திகளை நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் வெளியிட வேண்டும்.
பரபரப்பூட்டுகிற செய்திகளை வெளியிடும்போது, சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டால் மக்களிடையே பிளவு ஏற்படாது. எனவே, இது போன்ற செய்திகளை எழுதும்போதோ, ஒளிபரப்பும் போதோ கவனமுடன் இருக்க வேண்டும்.
இப்போது நமது நாடு கடினமான கால கட்டத்தில் உள்ளது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் சமுதாயத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளன. அசாமில் நிகழ்ந்த கலவரத்தைத் தொடர்ந்து, மும்பை, புனே, பெங்களூர், சென்னை, ஹைதராபாத் நகரங்களில் இருந்து வடகிழக்கு மாநிலத்தவர்கள் வெளியேறினர்.
சமூக அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அனைத்து சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
நமது நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ளது பெருமை தரும் விஷயமாகும்.
மக்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கருவியாக மட்டுமல்லாமல், நாட்டின் மனசாட்சியாகப் பத்திரிகைகள் செயல்பட வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கருத்துகளைக் கொண்ட மக்கள் வசிக்கின்றனர்.
இது போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகங்கள் உள்ள நாட்டில், எதிர் கருத்துகளை சுதந்திரமாக தெரிவிக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவது நமது தனிச்சிறப்பாகும். இத்தகைய சூழ்நிலை இந்நாட்டில் நிலைத்து நிற்க, பொறுப்பை உணர்ந்து செயல்படக் கூடிய சுதந்திரமான ஊடகம் அவசியமாகும்.
கேரளத்தில் உள்ள பத்திரிகைகள், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உதவுவதிலும், பொதுக் கருத்தை ஏற்படுத்துவதிலும் சிறந்து விளங்குகின்றன. வளர்ச்சி சார்ந்த இதழியல் என்ற கருத்து நாட்டின் பிற பகுதிகளில் கவனம் பெறுவதற்கு முன்பே, அது போன்ற செய்திகளை மலையாள நாளிதழ்கள் வெளியிடத் தொடங்கிவிட்டன.
பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்த செய்திகளை மலையாள தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பி வருவதாக என்னிடம் தெரிவித்தனர். இது போன்ற ஒரு நிகழ்ச்சி நாட்டின் பிற பகுதிகளில் உள்ள தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டதாகத் தகவல் இல்லை.
கேரளத்தில் உள்ள பழம்பெருமை மிக்க நாளிதழ்கள், சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தியே தொடங்கப்பட்டன. தீபிகா, மலையாள மனோரமா, கேரள கெளமுதி ஆகிய பத்திரிகைகள் நூறாண்டுகளைக் கடந்துவிட்டன.
மாத்ருபூமி நாளிதழ் இன்னும் சில ஆண்டுகளில் 100-வது உள்பட 10-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பாகின்றன” என்றார் பிரதமர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக