ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படம்: ஐ.நா கடும்கண்டனம் !

UN leader condemns 'hateful' anti-Islam filmஐ.நா:இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுப்படுத்தும் வகையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தின் சில காட்சிகள் யூ ட்யூப் சமூக இணையதளத்தில் வெளியானது. இது உலக முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. உலகின் பல நாடுகளிலும் அமெரிக்க தூதரகங்கள் முன்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. லிபியா,
எகிப்து,சூடான் போன்ற நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. லிபியாவில் அமெரிக்க தூதர் உள்பட நான்குபேர் மரணமடைந்தனர். இந்நிலையில் இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்திற்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: இத்திரைப்படம் வெறுப்பை தூண்டக்கூடியது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. உலகில் இரத்தக்களரியும், மதவெறியையும் தூண்டுவதற்காக திட்டமிட்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனைத் தொடர்ந்து உருவாகும் வன்முறைகளை ஆதரிக்கமுடியாது. இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக