டெஹ்ரான்:நாகரீகமற்ற சியோனிஸ்டுகளின் காலம் முடிந்துவிட்டது. அவர்கள் அழிவின் விளிம்பில் உள்ளனர் என்று ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் கூறியுள்ளார். பல்வேறு மத நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிவினையின் விதையை தூவும் சியோனிஸ்டுகளின் பிடியில் இருந்து உலகம் சுதந்திரம் அடையும் என்பதில் தனக்கு நல்ல நம்பிக்கை இருப்பதாக
நஜாத் தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசின் நிலைமை ஆபத்தில் இருப்பது அமெரிக்க அரசுக்கு புரிந்துவிட்டது. இது யூத அரசு புதிய சூழ்ச்சிகளை மேற்கொள்ள தூண்டுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் அஹ்மத் நஜாதின் அறிக்கை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக