
பெண்ணுக்கு 10 பவுன் நகை, மாப்பிள்ளைக்கு 2 பவுன் செயின் போடுவதாக முடிவு செய்தனர். நேற்றிரவு அமைந்தகரை ஷெனாய் நகரில் உள்ள சமூக நலக்கூடத்தில் இருவருக்கும் திருமண வரவேற்பு நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் வந்து வாழ்த்தினர். நள்ளிரவு 2 மணி வரை நண்பர்களுடன் மாப்பிள்ளை வெங்கடேசன் பேசி கொண்டு இருந்தார். பெங்களூரில் இருந்து சில நண்பர்கள், ஒரு பெண் வந்து இருந்தனர். அதன் பிறகு மாப்பிள்ளை வெங்கடேசன் திடீரென மாயமானார். பெங்களூர் பெண்ணையும் காணவில்லை.
இன்று காலை 7.30 மணிக்கு திருமணம் என்பதால் மண்டபம் பரபரப்பானது. இது பற்றி பெண்ணின் தந்தை கோவிந்தராஜ் அமைந்தகரை போலீசில் புகார் செய்தார். மாப்பிள்ளையின் நண்பர்கள் 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இந்நிலையில் மணப்பெண் சுகன்யாவுக்கு அவசர அவசரமாக வேறு மாப்பிள்ளையை தேடினர். திருமணத்துக்கு வந்திருந்த மதுரவாயலை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் சுதிர்குமாருக்கு (27) பெண் பார்த்து கொண்டு இருப்பது உறவினர் மூலம் தெரியவந்தது.
உடனே சுதிர்குமாரை மண்டபத்துக்கு அழைத்தனர். அவரிடம் பேசினர். திருமணத்துக்கு சம்மதித்தார். அவரிடம் மணப்பெண் சுகன்யா பேச வேண்டும் என்று கூறினார். அதன்படி மண்டபத்தில் உள்ள அறையில் இருவரும் சந்தித்து பேசினர். Ôமணமகன் மாயமான விவகாரம் பற்றி வருங்காலத்தில் பேச கூடாதுÕ என்று சுகன்யா நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது.
அதை சுதிர்குமார் ஏற்று கொண்டார். அதன் பிறகு காலை 10 மணிக்கு சுகன்யா , சுதிர்குமார் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக