செவ்வாய், செப்டம்பர் 04, 2012

சட்டசபையில் திடீரென தன் சட்டையை தானே கிழித்த எம்.எல்.ஏ !

ஜார்க்கண்ட் சட்டசபையில், எம்.எல்.ஏ., ஒருவர், தன் சட்டையை தானே கிழித்துக் கொண்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜார்க்கண்டில், முதல்வர் கரியமுண்டா தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது. அம்மாநில சட்டசபை, நேற்று காலை, 11 மணிக்கு கூடியது. அப்போது, விவசாயிகளிடமிருந்து, அரசு நிலம் கையகப்படுத்திய பிரச்னையை எழுப்பிய, எதிர்க்கட்சியான, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.,க்கள், பலத்த கோஷங்கள்
எழுப்பியபடி, சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், கோஷமிட்ட எம்.எல்.ஏ.,க் களில் ஒருவரான சம்ரேஷ் சிங், திடீரென, ஆக்ரோஷமாக தன் சட்டையை கிழித்து எறிந்தார். இதைக் கண்ட மற்ற எம்.எல்.ஏ.,க்கள், அதிர்ச்சியில் உறைந்தனர். சம்ரேஷ் சிங்கை சமரசம் செய்யும் முயற்சியில், சபாநாயகர் ஈடுபட்டார். ஆனாலும், பலன் இல்லை. இதையடுத்து, சபையை ஒத்திவைத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக