மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மனைவி நளினி சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது காவல்துறையிடம் நில அபகரிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் நில அபகரிப்பு புகாரில் சிக்கிய திமுக முன்னாள் அமைச்சர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்
இந்த நிலையில்,நளினி சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் பல ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. |
இது தொடர்பாக காஞ்சிபுரம் முட்டுக்காடு பஞ்சாயத்து கரிக்காட்டு குப்பம் பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் அளித்துள்ள புகார் மனுவில்,"முட்டுக்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட மீனவ கிராமத்தில் கடற்கரையில் பல ஏக்கர் நளினிசிதம்பரம் மற்றும் அவரது மகன்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மேய்ச்சல் மற்றும் ஆற்றுப்படுகை பகுதிகள் , அரசு புறம்போக்கு நிலம் இவர்களுடைய காம்பவுண்ட் சுவருக்குள் அடைக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவ மக்கள் கடலுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதற்கென அரசு வருவாய்துறையில் உள்ள வரைபடத்தை மாற்றி போலியாக பாதை அமைத்துள்ளனர்.கடலோர பகுதி சுவர் மூலம் ஆக்கிரமித்து மறிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுனாமி மற்றும் ஆபத்து ஏற்படும் போது யாரும் தப்பிக்க முடியாத அளவிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.இது குற்றச்செயல் ஆகும்.
கடற்கரையோரத்தில் 200 மீட்டருக்கு அப்பால் 500 மீட்டருக்குள் இயற்கை தடுப்புகள் மட்டுமே இருக்க வேண்டும்.ஆனால் இவர்கள் காம்பவுண்ட் சுவர் எழுப்பியிருக்கின்றனர். இது சி.ஆர்.2 விதிகளுக்கு எதிரானது.மணலை கொட்டி நிலப்பரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.வருவாய் பதிவேடுகள் - ஆவணங்கள் நில அமைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.இதன் பின்னர் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது.
கடலோரங்களில் சுவர், ரோடு அமைக்க நீதிமன்ற தடை உள்ளது. ஆனால் இவர்கள் இந்த உத்தரவை மதிக்கவில்லை.எனவே 2011 சி.ஆர்.-2 படி வருவாய்துறை நடவடிக்கை எடுத்து இவர்களின் ஆக்கிரமிப்பை மீட்டு இவர்களை வெளியேற்ற வேண்டும்.மீன்பிடி தொழில் நடத்த வழிவகை செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிதம்பரம் சார்பில் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரான வழக்கறிஞர் அருண் நடராஜன் செய்தியாளர்களிடம் கூறிகையில்," இந்த நிலம் 20 ஆண்டுகளாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த புகார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பகுதியில் கழிப்பறையாக பயன்படுத்துவது தொடர்பாக சென்னை நீதிமன்றத்தில் வழக்கு நிலுலையில் உள்ளது.சுகாதாரம் பேணிகாத்திடத்தான் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.இப் புகாரை சட்டப்டி சந்திப்போம்” என்றார்.
இப்புகாரை தொடர்ந்து, விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக