சனி, செப்டம்பர் 15, 2012

தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்: ஸ்தம்பித்தது சென்னை... ஆடிப் போனது அமெரிக்க தூதரகம் !

 Muslim S Protest Halt Chennai Hours சென்னை: இஸ்லாத்தையும், இறைத்தூதர் நபிகள் நாயகத்தை விமர்சித்து அமெரிக்கர் இயக்கிய திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எகிப்து, லிபியா, ஏமன், இந்தியா என உலக நாடுகள் அனைத்திலும் அமெரிக்க தூதரகம் முன்பாக போராட்டங்கள் நடைபெற்று  வருகின்றன. சென்னையிலும் அமெரிக்க துணை தூதரகம் முன்பாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டங்களை தினந்தோறும் நடத்திவருகின்றன. நேற்று முன்தினம் பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையிலும், நேற்று தமுமுக தலைமையிலும்
அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்கள் போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக அமெரிக்க தூதரகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
சென்னை அண்ணாசாலை பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இறைத்தூதர் நபிகள் நாயகத்தை விமர்சித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க பாதிரியாரின் படத்தை எரித்தும், அமெரிக்க தேசியக் கொடியை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பின்னர் அங்கிருந்து அமெரிக்க துணை தூரகத்திற்கு முன்னர் குவிந்த  முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை:
நேற்று போராட்டத்தின் போது அமெரிக்க தூதரகம் மீது கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதால் முன்னெச்சரிக்கையாக போலீஸார் கண்ணீர் புகை குண்டு மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்துடன் தயாராக இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக