இஸ்லாமாபாத்:தேசிய, மாகாண சட்டப்பேரவைகளில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிச் செய்யும் மசோதாவிற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இம்மசோதா அடுத்த பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பல்சமய துறை அமைச்சர் அக்ரம் மஸீஹ் கில்
தெரிவித்துள்ளார்.
இம்மசோதா அமைச்சரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. நாளை பாகிஸ்தானின் தேசிய அவை கூட்டம் துவங்குகிறது. சட்ட அமைச்சகம் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பியது. மசோதாவிற்கு சட்ட அந்தஸ்து கிடைப்பதன் மூலம் சிறுபான்மை சமூகங்களின் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்று அக்ரம் மஸீஹ் கூறினார்.
பாகிஸ்தானில் இருந்து சிறுபான்மையினர் வெளியேறுவது, மத அவமதிப்பு வழக்கில் கிறிஸ்தவ பெண்மணியின் கைது ஆகிய சம்பவங்கள் சர்ச்சையை கிளப்பியதன் பின்னணியில் இம்மசோதாவிற்கு பாகிஸ்தான் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக