வெள்ளி, செப்டம்பர் 14, 2012

6 மாசம் சாப்பிட்டு, 6 மாசம் சாகச் சொல்கிறதா மத்திய அரசு . இல்லத்தரசிகள் குமுறல். . .

சென்னை: வருடத்திற்கு 6 சிலிண்டர்கள்தான் மானிய விலைக்கு, அதற்கு மேல் என்றால் அதிக விலைக்கு என்று மத்திய அரசு கூறுவது மிகவும் மோசமான ஒரு விஷயம். அவர்கள் சொல்வதைப் பார்த்தால் வருடத்திற்கு 6 முறை மட்டுமே சமையல் செய்து சாப்பிடுங்கள், மீதமுள்ள 6 மாதத்திற்கு சமைக்காமல், சாப்பிடாமல் செத்துப் போங்கள் என்று கூறுவது போல உள்ளது என்று குமுறல் வெளியிட்டுள்ளனர் இல்லத்தரசிகள். சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்திலும் கையை வைத்து விட்டது மத்திய அரசு. இனிமேல் வருடத்திற்கு 6 முறை மட்டுமே மானிய விலைக்கு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். அதற்கு மேல் வாங்குவதாக இருந்தால் தற்போது மானிய விலையில் தரப்படும் சிலிண்டரை
விட இரண்டு மடங்கு விலை கொடுத்தாக வேண்டும்.
இது மக்களை குறிப்பாக இல்லத்தரசிகளை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து ஒரு பெண்மணி கூறுகையில், எங்கள் வீட்டில் 6 பேர் இருக்கிறோம். 40 நாட்கள் வரைதான் ஒரு சிலிண்டர் வரும். சில நேரங்களில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து விட்டால் அதுவும் குறைந்து 30 நாட்களாகி விடும். ஆக வருடத்திற்கு எங்களுக்கு 12 சிலிண்டர்கள் தேவைப்படும்.
இப்போது 6 சிலிண்டர்தான் மானிய விலைக்கு என்று மத்திய அரசு கூறுகிறது. அப்படிப் பார்த்தால் நாங்கள் இனிமேல் 6 சிலிண்டர்களை மட்டுமே குறைந்த விலைக்குப் பெற முடியும். ஆனால் மற்ற 6 சிலிண்டர்களையும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இதை எப்படி ஏற்க முடியும். என்ன நியாயம் இது.
சிலிண்டர் இல்லாமர் ஒரு வேலையம் நடக்காது என்பது மத்திய அரசுக்குத் தெரியாதா. அவர்கள் வீட்டில் சிலிண்டர் இல்லாமல்தான் சமையல் செய்கிறார்களா. இப்படி வீட்டு சமையலறை வந்து வயிற்றில் அடித்தால் எப்படி. இதுதான் நல்லாட்சியா. ஒரு பெண்ணை கட்சித் தலைவராகக் கொண்ட கட்சி ஆட்சி புரியும் அரசு இதைச் செய்திருக்கக் கூடாது என்று அவர் குமுறினார்.
அமைச்சர்கள், விஐபிக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோருக்கு மட்டும் வருடத்திற்கு நூற்றுக்கணக்கில், கணக்கே இல்லாமல், வரைமுறையே இல்லாமல் சிலிண்டர்களை மத்திய அரசு தூக்கிக் கொடுப்பதையும் மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறதோ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக