செவ்வாய், ஏப்ரல் 02, 2013

அமெரிக்க ராணுவம் தாலிபான்களை தாக்க அனுமதிக்க மாட்டேன் ! - இம்ரான் கான்!

லாகூர் : தான் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்க ராணுவம் தாலிபான்களை தாக்க அனுமதிக்க மாட்டேன் என்று பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார்.


பாகிஸ்தானில் வரும் மே 11-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பழங்குடி மக்கள் அதிகம் உள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய இம்ரான் கான் தீவிரவாதத்தை ஒழிக்க அரசு தீவிரவாதம் சரியல்ல என்றும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

உண்மையை வெளிப்படையாக கூறுவதால் தன்னை தாலிபான் கான் என்று அழைப்பதை தான் பொருட்படுத்த போவதில்லை என்றும் எச்சூழலிலும் பாகிஸ்தானில் அமெரிக்க ராணுவம் தாலிபான்களை வேட்டையாட அனுமதிக்க மாட்டேன் என்றும் உண்மையான சுயாட்சி மிக்க நாடாக பாகிஸ்தான் மாற தன் கட்சியை ஆதரிக்குமாறு இம்ரான் கான் கேட்டு கொண்டார்.

1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக