செவ்வாய், ஏப்ரல் 02, 2013

மதசார்பற்றவர்தாம் பிரதமர்: ஐக்கிய ஜனதா தளம் திட்டவட்டம்!

பாட்னா: பன்முக சமுதாய அமைப்பை உடைய மக்கள் வாழும் இந்தியாவில் மதச்சார்பற்ற தன்மை உடையவரே பிரதமராக வரவேண்டும் என்ற எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐக்கிய ஜனதாதளம் கூறியுள்ளது.

பா.ஜ.க ஆட்சிமன்றக் குழுவில் குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி சேர்க்கப்பட்டதை அடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என பா.ஜ.கவில் ஒரு பிரிவினர் கோரி வருகின்றனர்.இதுதொடர்பாக பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் பீகார் மாநில செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது :
பன்முக சமுதாய அமைப்பை உடைய மக்கள் வாழும் இந்தியாவில் மதச்சார்பற்ற தன்மை உடையவரே பிரதமராக வரவேண்டும் என்ற எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழுவில் மோடி சேர்க்கப்பட்டது அக்கட்சியின் உள்விவகாரம் என்றார்.
இதுதொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் சரத் யாதவ் டெல்லியில் கூறியதாவது :
புதிதாக அமைக்கப்பட்டுள்ள பா.ஜ.க. ஆட்சிமன்றக் குழு தொடர்பாக எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதுபற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. ஆனால் எதிர்காலத்தில் எதுவேண்டுமானாலும் நடைபெறலாம் என்றார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக