- கொரிய தீபகற்பத்தில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க சீனாவின் உதவியை அமெரிக்கா நாடி உள்ளது.
- தொடர்ந்து மிரட்டி வரும் வடகொரியா தனது நிலையை மாற்றிக் கொள்ள சீன அதிபர் ஜீ ஜின்பிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் கொரிய தீபகற்பத்தில் அமெரிக்கா தனது ராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை நிறுவுவது குறித்து சீனாவிடம் அமெரிக்க அதிகாரிகள் விளக்கி உள்ளனர். மேலும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் பலர் சீனா செல்ல உள்ளனர்.
- அமெரிக்கா, தென்கொரிய பகுதிகள் மீது எந்த நேரத்திலும் ஏவுகணையை வீசி வடகொரியா தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அனைத்து நாட்டு தூதரக ஊழியர்களையும் வெளியேற வேண்டும் என அந்நாடு எச்சரித்துள்ளது
- போர் மூண்டால் வெளிநாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்பதால் அனைவரும் வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் தூதர்கள் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.
- பிரான்ஸ் தனது தூதரக ஊழியர்களை திரும்பப் பெறப் போவதில்லை என அறிவித்துள்ளது. அங்குள்ள நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் எனக்கூறியுள்ளது.
- ஐநா நிவாரணக் குழுவினர் வடகொரியாவிலேயே தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்துள்ளனர். ஐநாவைச் சேர்ந்த 57 பணியாளர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். போர்ச் சூழல் நிலவினாலும் அங்கேயே தங்கி மேம்பாடு மற்றும் மனிதநேய பணிகளில் ஈடுபட உள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் நெசிர்கி தெரிவித்துள்ளார்.
- வடகொரியாவின் எச்சரிக்கை தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் ஆய்வு செய்து வருகிறார். இதற்கு உரிய நேரத்தில் ஐநா பதிலளிக்கும். கொரிய தீபகற்பத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்த வடகொரியா உதவ வேண்டும்.
- அந்நாட்டில் நிலவும் பட்டினி, பஞ்சத்தை போக்கவும், குழந்தைகளுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகளை அனுப்பவும், சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
- வடகொரியா தனது கிழக்கு எல்லையில் இரண்டு முசுடான் ரக ஏவுகணைகளை ஏவுவதற்காக தயார் நிலையில் வடகொரியா வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன3
ஞாயிறு, ஏப்ரல் 07, 2013
கொரிய நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க சீனாவின் உதவியை அமெரிக்கா நாடி உள்ளது.!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக