ஞாயிறு, ஏப்ரல் 07, 2013

கர்நாடகாவில் பா.ஜ.க கூடாரம் காலியாகிறதா?

  • கர்நாடக பா.ஜ.க சட்டபேரவை உறுப்பினர்கள் சுரேஷ் பாபு, பிரதாப் கவுடா பாட்டீல் ஆகியோர் ராஜினாமா செய்தனர். கடந்த ஒரு மாதமாக பா.ஜ.க வில் உள்ள அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் அக்கட்சியை விட்டு விலகுவது நடந்து வருகிறது.

    கடந்த மாதம் 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். அதைத் தொடர்ந்து யோகேஷ்வர், ராஜூகவுடா, சங்கரலிங்கே கவுடா, மானப்ப வஜ்ஜல், புட்ட ராஜு, கல்பனா சித்தராஜு ஆகியோர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

    பதவியை துறந்தவர்கள் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையிலான கர்நாடக ஜனதா, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். நேற்று காலை ரெய்ச்சூர் மாவட்டம், மஸ்கி சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. பிரதாப் கவுடா பாட்டீல், பெல்லாரி மாவட்டம், கம்பளி தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. சுரேஷ்பாபு ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக