பாபரி மஸ்ஜித் இடிப்பு விவகாரத்தில் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ காலதாமதமாக மனு செய்தது ஏன் என்றும், நீதிமன்றத்தால் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் மத்திய அரசு அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட விவகாரத்தில் அத்வானி மற்றும் அப்போதைய உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த கல்யாண் சிங் ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கான முகாந்திரம் இல்லை என்று 2010-ஆம் ஆண்டு மே மாதம் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பாஜக தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக