- சென்னை மதுரவாயல் பகுதியில் கல்லூரி ஒன்றில் துப்பாக்கியுடன் சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களில் ஒருவர் காயம் அடைந்தார். மற்றொருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை மதுரவாயிலில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் ஜார்க்கண்டைச் சேர்ந்த மாணவர் காயமடைந்தார். கணினி அறிவியல் படித்துக் கொண்டிருக்கும் இரண்டு வெளிமாநில மாணவர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, பீகாரைச் சேர்ந்த மாணவர் ஆதித்யா, தான் வைத்திருந்த கைதுப்பாக்கியால் தாக்கியதில் மணீஷ் என்ற மாணவர் காயமடைந்தார்.
- சண்டையின் காரணத்தையும், துப்பாக்கிக் கிடைத்தது எப்படி என்றும் பீகார் மாணவர் ஆதித்யாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம் பரவுவது, நாட்டிற்கு பெரும் ஆபத்தாகும். இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம்
வெள்ளி, ஏப்ரல் 05, 2013
துப்பாக்கியுடன் சண்டையிட்ட வெளிமாநில மாணவர்கள்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக