திங்கள், ஏப்ரல் 01, 2013

மோடியின் மோசடி அம்பலம்! - பணம் கொடுத்து அமெரிக்க எம்.பிக்களை குஜராத்திற்கு அழைத்து வந்ததாக தகவல்!

அண்மையில் அமெரிக்க எம்.பிக்கள் மற்றும் தொழிலதிபர்கள் அடங்கிய குழு குஜராத் முதல்வர் மோடியை சந்தித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து செனட் எம்.பிக்கள் உள்ளிட்டவர்களை பணம் கொடுத்து அழைத்து வந்தது அம்பலமாகியுள்ளது.
குஜராத்தில் மோடியுடனான சந்திப்பிற்கு அமெரிக்க காங்கிரஸில் செனட்டர்கள் உள்ளிட்ட நபர்கள் ஒவ்வொருவருக்கும் 16 ஆயிரம் அமெரிக்க டாலர் வீதம் பாஜகவுடன் தொடர்புடைய அமெரிக்க அமைப்பு செலவுச் செய்துள்ளதாக ஷிகாகோவில் இருந்து வெளியாகும் ‘ஹை இந்தியா’ என்ற அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சட்டமியற்றும் அவையின் உறுப்பினர்களான செனட்டர்கள், பரிசுகளை பெறுவதும், ஸ்பான்ஷர்ஷிப்பின்  கீழ் பயணம் மேற்கொள்வது அமெரிக்காவில் குற்றகரமானது. புதுடெல்லியில் அமெரிக்க தூதரகமோ, வாஷிங்டனில் இந்திய தூதரகத்திற்கோ தெரியாமலேயே இக்குழுவினர் குஜராத்திற்கு சென்று மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளனர் என்று ஹை இந்தியா பத்திரிகை கூறுகிறது.
பா.ஜ.கவின் வெளிநாடு வாழ் இந்தியர் அமைப்பான ஓவர்ஸீஸ் ஃப்ரண்ட் ஆஃப் பி.ஜே.பி உடன் இணைந்து பணியாற்றும் நேசனல் இந்தியன்-அமெரிக்கன் பப்ளிக் பாலிஸி இன்ஸ்ட்யூட் மோடியுடனான சந்திப்பிற்கு அமெரிக்க குழுவிற்கு அழைப்பு விடுத்தது. இவ்வமைப்பின் உறுப்பினரான ஸலப் குமார் என்பவர்தாம் அமெரிக்க குழுவின் பயணத்திற்கு மேற்பார்வையாளராக செயல்பட்டுள்ளார். ரீகன் டெமோக்ரேட் என்று தன்னை சுயமாக அழைத்துக் கொள்ளும் ஸலப் குமாருக்கு அமெரிக்காவில் சொந்தமாக பிசினஸ் நெட்வொர்க் உண்டு. அண்மைக் காலமாக அமெரிக்க அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்திவரும் ஸலப் குமாருக்கு, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வால்ஷ் போன்றோருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. 
மோடியுடனான சந்திப்பிற்கு பிறகு காந்தி நினைவிடம், உதய்பூர் கோட்டை, ஆக்ராவில் தாஜ்மஹால், அமிர்தரஸில் பொற்கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வது, பஞ்சாப் மற்றும் கர்நாடகா முதல்வர்களின் இரவு விருந்தில் பங்கேற்பது ஆகியன அமெரிக்க பிரதிநிதிகளின் பயண அட்டவணையில் இடம்பெற்றிருந்தது. தனியார் சார்ட்டர் விமானத்தில் பிசினஸ் வகுப்பில் பயணிப்பது உள்ளிட்ட மிகுந்த வசதிகளை அமெரிக்க குழுவிற்கு அந்த அமைப்பு ஏற்பாடுச் செய்திருந்தது. ஒருவருக்கு 16 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க குழுவின் பயணத்தின் முன்னோடியாக ஷிகாகோவில் பேட்டியளித்த ஸலப் குமார், அமெரிக்க செனட்டர்களில் 4 பேர் இடம்பெறுவர் என்று தெரிவித்திருந்தார். ஆனால், 18 பேரைக் கொண்ட அமெரிக்க பிரதிநிதிக்குழுவில் 3 அமெரிக்க செனட்டர்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தனர்.
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாலா கூறுகையில், இது குஜராத்துக்குப் பெரும் அவமானமாகும். 16,000 அமெரிக்க டாலர்கள் அதாவது ரூ. 8,68,480 பணத்தைப் பெற்றுக் கொண்டு அமெரிக்கக் குழுவினர் குஜராத் வந்துள்ளனர். அதன் பிறகு இதை அதிகாரப்பூர்வ பயணம் போல சித்தரித்துள்ளனர். இது மோசடியாகும். இதற்காக குஜராத் மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார் அவர்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக