திருநெல்வேலி: கூடங்குளம் அணு உலையில் யுரேனியத்தை நிரப்புவதற்காக வல்லுநர்கள் நேற்று வருகை தந்துள்ளனர்.கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் வன்முறையாக வெடித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் கூடங்குளத்தில் முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணிக்காக, மத்திய அணுசக்தி கட்டுப்பாடு வாரிய மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட வல்லுநர் குழுவினர் நேற்று கூடங்குளம் வந்தனர். ஆயத்த பணிகள் பற்றிய விவரங்களை ஆய்வு
செய்யும் அவர்கள், யுரேனியம் நிரப்புவதற்கான இறுதி கட்ட அனுமதியை வழங்குவார்கள்.மும்பையை சேர்ந்த அணுசக்தி கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்தனர். இன்று முதல் யுரேனியம் நிரப்பும் பணி தொடங்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக