வியாழன், செப்டம்பர் 13, 2012

இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படம்: உலக முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது !

Anti-Islam film- As Muslim world eruptநியூயார்க்:இறைவனின் இறுதித் தூதரான, முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை மிகக் கேவலமாக விமர்சிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த அவதூறான திரைப்படம் லிபியாவில் முஸ்லிம்களிடம் ஏற்பட்ட கொந்தளிப்பே அங்குள்ள அமெரிக்க தூதர் உள்பட நான்குபேரின் படுகொலைக்கு வழிவகுத்தது. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிரான எதிர்ப்புகளும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த
சம்பவங்களும் நேற்று(புதன்கிழமை) அரபு நாடுகளில் இருந்து வெளியாகும் பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக இடம்பிடித்தன. ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட அமைப்புகள் இத்திரைப்படத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளன. இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படங்களும், கார்ட்டூன்களும் உலகிற்கு புதியதல்ல. ஆனால், தற்போதைய சம்பவத்தின் பின்னணியில் கிறிஸ்தவ-யூத லாபியின் ஆதரவு இருக்கிறதா? என்பதுக் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘அல் குத்ஸ் அல் அரபி’ பத்திரிகை தனது எடிட்டோரியலில் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள சியோனிச லாபிதான் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் என்று ப்ரஸ் டி.வி கூறுகிறது. கலிஃபோர்னியாவில் சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில் தர ஏற்றம் செய்ததைத் தொடர்ந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியது. கிட்டத்தட்ட 5 மில்லியன் டாலர் செலவழித்து தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தின் பின்னணியில் 100க்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் நிதியுதவி அளித்துள்ளதாக டெய்லி மெயில் கூறுகிறது.
இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள்  ‘innocence of muslims’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம் போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 13 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவம் பெரும் எதிர்ப்பை கிளப்பியிருக்கும் வேளையிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான். இத்திரைப்படம் ஏற்படுத்திய கொந்தளிப்பை தொடர்ந்து பாசிலி தலைமறைவாகிவிட்டான். தாக்குதலுக்கு பயந்து ரகசிய இடத்தில் பாசிலி ஒளிந்து இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக