
ஷாஹ்பூர் அரசு கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லை என்று சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட்டிடம் ரோஹித் இரண்டு தினங்கள் முன்பு புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரோஹித்திற்கும், பஜ்ரங்தளத்தின் வெறிப்பிடித்த ஹிந்துத்துவாவினருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
நேற்று முன் தினம் பஜ்ரங்தளத்தைச் சார்ந்த தீவிரவாதிகளான ஷியாம் சுக்லா, விஜய் சவுதரி, அவிநாஷ் சிங் யாதவ், வினோத் மோரே ஆகியோர் ரோஹித் ஜோஷியின் வீட்டிற்கு சென்று இப்பிரச்சனைக் குறித்து பேசித் தீர்ப்போம் என பொய்யாக கூறி வெளியே அழைத்துச் சென்றனர். இதனை நம்பி அவர்களுடன் சென்ற ரோஹித்தை, பஜ்ரங்தளத்தைச் சார்ந்த ஹிந்துத்துவா வெறியர்கள் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அவர் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்தனர். இச்சம்பவத்தில் போலீசார் நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்கை பதிவுச்செய்துள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஹித் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் உறுதிச் செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக