கெய்ரோ:இறைவனின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்)அவர்களையும், இஸ்லாத்தையும் அவமதிக்கும் திரைப்பட டிரைலரை வெளியிட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கூறியுள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: “முற்றிலும் வகுப்புவாதத்தின் அடிப்படையிலான விருப்பங்களே இதன் பின்னணியில் அமைந்துள்ளன. புனித சின்னங்கள்
மீதான தாக்குதலை அனைத்து சமூகங்களும் எதிர்க்கின்றன. அத்துடன் நாட்டில் உள்ள பல்வேறு தூதரகங்கள் மற்றும் நிறுவனங்களை பாதுகாக்கும் பொறுப்பும் அரசுக்கு உள்ளது. சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்கவில்லை. மக்கள் சட்டத்தை மதிக்கவேண்டும்.” இவ்வாறு முர்ஸி கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக