வியாழன், செப்டம்பர் 13, 2012

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் அதிரடி அறிவிப்பு !

சென்னைமுஸ்லிம்கள் தங்கள் உயிரையும்விட புனிதமாக  மதிக்கும் முஹம்மதுநபியவர்களை இழிவுபடுத்தும் விதமாகஅமெரிக்காவிலுள்ள‌ கலிஃபோர்னியாமாகானத்தில் வசித்து வரும் யூதஇனத்தைச்சேர்ந்த ஷாம் பேசிலி என்றதிரைப்பட இயக்குனர் மற்றும்அமெரிக்காவைச்சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ்என்ற கிறிஸ்தவ போதகர் ஆகிய இருவரும்ஒன்றினைந்து திரைப்படம் 
ஒன்றைதயாரித்துள்ளனர்அதில் உண்மைக்குபுறம்பாகவும்பொய்யான விஷயங்களைபரப்பியும் ஒட்டு மொத்த முஸ்லிம்சமூகத்தினரையும் புண்படுத்தும் விதமாகஅதனை தயாரித்துள்ளனர்இதனால் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூகமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்துபலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறதுமுஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சானமுஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில்உள்ளவர்கள் செய்துவருகிறார்கள்இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள்தண்டிப்பதாக தெரியவில்லைஇத்தகைய செயலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்இந்தியாவின் சார்பாக சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இன்று(13.09.2012) மாலை 4 மணியளவில்  முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளதுபாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில்தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் மாநில செயலாளர் ஷேக் முஹம்மதுஅன்சாரிஎஸ்.டி.பி. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக