வாஷிங்டன்:ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவும் வேளையில் இஸ்ரேல் பிரதமரை சந்திக்க ஒபாமா மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இம்மாதம் அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாரக் ஒபாமாவை சந்திக்க இயலாது என்று வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது. ஒபாமாவின் நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே
தயாரிக்கப்பட்டுவிட்டது. அதில் நெதன்யாகுவுடன் சந்திப்பது இடம் பெறவில்லை என்று வெள்ளை மாளிகை விளக்கமளிக்கிறது. ஒபாமாவுடன் சந்திப்பு நடத்த வாய்ப்புக்கோரி இஸ்ரேல் நேற்று முன்தினம் அமெரிக்க அதிகாரிகளிடம் கடிதம் அளித்தது. ஆனால், இக்கடிதத்தை அமெரிக்க அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர் என்று இஸ்ரேலின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் மீது மேலும் தடையை தீவிரப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கவே ஒபாமாவை சந்திக்க நெதன்யாகு திட்டமிட்டார் என கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக