வெள்ளி, செப்டம்பர் 14, 2012

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு.. விலைவாசி கடுமையாக உயரும் !

 Diesel Price Up Record Rs 5 Per Litre டெல்லி: டீசல் விலையை மத்திய அரசு லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. விலை உயர்வுக்கு முன் டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ.41.32-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.46.95-ஆக விலை உயர்ந்துள்ளது. இதற்கு முன் கடந்த ஆண்டு
ஜூன் மாதம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டதால் சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.48.91 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை ஒரு லிட்டர் டீசல் ரூ.43.91-க்கு விற்கப்பட்டது.
டீசல் விலை உயர்வு காரணமாக பஸ் கட்டணங்கள், லாரி- வேன் கட்டணங்கள் உயரவுள்ளன. இதனால் அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள், உணவு தானியங்கள், பால் உள்ளிட்டவையின் விலைகளும், ஹோட்டல்களில் காபியில் ஆரம்பித்து அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக