ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

ஹாரியை குறிவைத்து தாக்குதல்: 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி !

Two killed at Prince Harry's Afghan baseகாபூல்:ஆஃப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு பிரட்டீஷ் ராணுவத்தினருடன் ராணுவ சேவை புரிய சென்ற இளவரசர் ஹாரியை குறிவைத்து தாலிபான் போராளிகள் நடத்திய தாக்குதலில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பலத்த பாதுகாப்பு மிகுந்த ஹெல்மந்த் மாகாணத்தில்உள்ள நேட்டோ ராணுவ தளத்தில் மோர்ட்டார்கள் மற்றும் சிறிய ஆயுதங்களை உபயோகித்து தாலிபான் போராளிகள்
தாக்குதலை நடத்தினர். தாக்குதல் நடந்த வேளையில் ஹாரி, ராணுவ தளத்தில்இருந்தார். அவர் பாதுகாப்பாக இருப்பதாக நேட்டோ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதலில் 16 தாலிபான் போராளிகளை கொன்றதாக நேட்டோ படையினர் கூறுகின்றனர்.
ராணுவ தளத்தின் மீது நடத்தபப்ட்ட தாக்குதலில் கட்டிடங்களும், வாகனங்களும் சேதமடைந்தன. ஹாரியை கொல்லவோ அல்லது கைதோ செய்வோம் என்று தாலிபான் எச்சரிக்கை விடுத்திருந்தது. நான்கு மாதம் நீளும் ராணுவ பயிற்சிக்காக ஆப்கான் வந்துள்ள ஹாரி, ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றுகிறார். ஹாரியை குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என்று தாலிபான் அறிவித்துள்ளது.
இஸ்லாத்திற்கு எதிரான திரைப்படத்தால் உலக முஸ்லிம்கள் கொந்தளித்திருக்கும் சூழலில் தாலிபான் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2008-ஆம் ஆண்டிலும் ஹாரி ஆஃப்கானில் ராணுவ பயிற்சிக்காக சென்றிருந்தார். ஆனால், அவர் ராணுவத்தில் பணியாற்றுவதை ஊடகங்கள் வெளியிட்டவுடன் ஆஃப்கானை விட்டு வெளியேறிவிட்டார். நேற்று நடந்த தாக்குதலைத் தொடர்ந்து ஹாரி, ஆஃப்கானில்ஆக்கிரமிப்பு ராணுவத்துடன் இணைந்து ராணுவ சேவையை தொடர்வாரா? என்பது குறித்து பிரிட்டீஷ் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு எதுவும் எடுக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக