திருக்கோவிலூரில் தே.மு.தி.க.,வினர் வைத்துள்ள விளம்பர பேனரில், 1,000 ரூபாய் நோட்டில் விஜயகாந்த் படம் உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில், தே.மு.தி.க., கனகனந்தல் கிளை சார்பில் வைத்துள்ள டிஜிட்டல் பேனர், மக்களிடை@ய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின், எட்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு வைத்த பேனரில், இடதுபுறம் காந்தி படம் போட்ட 1,000 ரூபாய் நோட்டு அச்சிடப்பட்டு, அதில், "இன்று' என
எழுதப்பட்டுள்ளது.
அடுத்து, வலதுபுறத்தில் அதே 1,000 ரூபாய் நோட்டில், காந்தி படத்திற்கு பதில், விஜயகாந்த் படம் இடம் பெற்றுள்ளது. இதில், "நாளை' என்ற வாக்கியம் உள்ளது. 2005ல் தே.மு.தி.க., தலைவர், 2006ல் சட்டசபை உறுப்பினர், 2011ல் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர், 2016ல் தமிழக முல்வர், 2019ல் இந்தியாவின் பிரதமர் என்ற நிஜமும், கற்பனையும் கலந்த வாசகத்துடன், கட்சி மாவட்டச் செயலர் வெங்கடேசன் நிர்வாகிகளுடன் நின்று, விஜயகாந்த் படம் உள்ள 1,000 ரூபாய் நோட்டைக் காட்டி, இன்று கற்பனையில்; நாளை நிஜத்தில் என, எழுதப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக