சென்னை: தேசிய அளவில் செயல்படும் மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் தலித் மாணவர்களில் திறமையானவர்களுக்காக, “ஏகலைவா” விருதும், ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளது.
சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய மாநாட்டில் ஏகலைவா விருதிற்கான அறிவிப்பை வெளியிட்டது கேம்பஸ் ஃப்ரண்ட். பிறப்பு ஏற்ற தாழ்வுகளால் திறமைகள் மறுக்கப்பட்ட ஏகலைவா என்ற தீரனின் நினைவாக, “ஏகலைவா” விருது வழங்குவதாக முன்மொழிந்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட ஒருவனின் திறமைகள் உயர் சாதி எனும் பிறப்பு ஆதிக்கத்தால் ஒடுக்கப்படுகின்றது. அது அன்றும், இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
ஜனநாயக நாடான நம் இந்தியாவில், பார்ப்பனியா உயர்வு கொண்டு, தாழ்த்தப்பட்டவனை நசுக்க துடிக்கும், “துரோனாச்சார்யா” பெயரில் விருது வழங்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் திறமை உள்ள ‘ஏகலைவா’ ஒதுக்கப்படுகின்றான்.
ஆகவே, உண்மையில் திறன் கொண்டவர்கள் தலித், தாழ்த்தப்பட்டவர்களே, என்பதை அறிந்து, கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அந்த மாணவர்களுக்காக, இந்த விருதினை வழங்குகிறது. இது தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான ஒரு விருதாகும்.
ஏகலைவா விருது?
மஹாபாரதத்தில், துரோனாச்சார்யா என்றோர் வில் வித்தை குரு இருந்தார். இவர் பார்ப்பனிய சமூகத்தை சார்ந்தவர். இவரிடம் ஒரு நாள், ஏகலைவா எனும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்த ஒருவன் வில்வித்தை கற்றுக்கொள்ள வந்தான். ஆனால் துரோனாச்சார்யா, ஏகலைவாவை அவன் தாழ்த்தப்பட்டவன் எனும் காரணத்தால் ஏற்றுக் கொள்ள மறுத்து திட்டி அனுப்பினார். இதன்பின் ஏகலைவா தானாக கடின முயற்சி மேற்க்கொண்டு வில் வித்தை கற்று, அதில் கை தேர்ந்த ஒருவனாக மாறிவிட்டிருந்தான். இதனை கேள்விப்பட்ட துரோனாச்சார்யா, அவனை உடனடியாக அழைத்து வர வைத்து, அவனை தன்னுடைய சீடனாக ஏற்றுக் கொள்வதாகவும், அதற்கான குரு காணிக்கை தரும்படியும் கூறினான்.அதன் விளைவாக, ஏகலைவா அவரின் வார்த்தைகளுக்கு பணிந்து, குரு தட்சனையாக என்ன வேண்டும் குருவே என்று வினவினான். இதற்கு, துரோனாச்சார்யா, உன்னுடைய கட்டை விரலை வெட்டிக் கொடு என்று கேட்டுள்ளான். இதுதான் ஏகலைவா விருதின் பின்புல கருத்தாக்கம்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக