சனி, ஏப்ரல் 06, 2013

மோடியின் அழைப்பை நிராகரித்த சுனிதா வில்லியம்ஸ்!

  • அஹ்மதாபாத்:பிரபல விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடி சந்திக்க விடுத்த அழைப்பை நிராகரித்துவிட்டார்.

    இந்தியா வந்துள்ள விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், நேற்று முன் தினம் குஜராத் மாநிலத்திற்கு வருகை தந்தார். அன்றைய தினம் முழுவதும் கொலைச் செய்யப்பட்ட மோடியின் எதிரியான ஹரேன் பாண்டியாவின் மனைவி ஜாக்ருதி பாண்டியாவுடன் செலவிட்டார். ஹரேன் பாண்டியாவின் உறவினர் தாம் சுனிதா வில்லியம்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    சுனிதாவுடன் சந்திப்பை நடத்த மோடியின் அலுவலகம் கடின முயற்சியை மேற்கொண்டது. ஆனால், சுனிதா வில்லியம்ஸ் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் விருந்தினர் என்ற கெளரவத்தை வழங்க மோடி அரசு மறுத்துவிட்டது.

    அஹ்மதாபாத் ஏர்போர்டில் இறங்கிய உடனேயே அரசு வாகனத்தில் பயணிக்க அதிகாரிகள் விடுத்த அழைப்பையும் சுனிதா வில்லியம்ஸ் நிராகரித்துவிட்டார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக