சனி, ஏப்ரல் 06, 2013

மும்பைக் கட்டட விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது !

  • மும்பை நகரில் நேற்று வியாழக்கிழமை மாடிக் கட்டடமொன்று இடிந்துவிழுந்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
  • உயிரிழந்தவர்களில் 26 பேர் சிறார்கள்.
  •  
  • சட்டவிரோதமாக கட்டப்பட்ட மாடியொன்றின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் 100க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
  • மேல்மாடிகள் கட்டப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் கீழ்மாடிகளில் தங்கியிருந்த குடும்பங்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளன.
  • இந்த சம்பவத்தை அடுத்து உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் பலர் பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
  •  
  • இந்த அனர்த்தம் இந்தியாவில் நடந்துவரும் கட்டட நிர்மாணங்களின் தராதரங்கள் பற்றியும் கட்டுமான நடைமுறைகள் பற்றியும் பலத்த வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக