சனி, ஏப்ரல் 06, 2013

சீனாவில் மாணவர்களிடையே பெருகிவரும் பால்வினை நோய்கள் !

  • பீஜிங்: தவறான, பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் ஏற்படும் எச்.ஐ.வி. கிருமித்தொற்று, உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் தோன்ற காரணமாகி விடுகிறது. சீனாவை சேர்ந்த ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது முதன்முதலாக 1985-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.

    அதிலிருந்து, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. கடந்த (2012) ஆண்டில் மட்டும் இந்நோயிற்கு 18 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 15-24 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகம் என சுகாதாரத் துறை கூறியுள்ளது.

    எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் மாணவர்கள் சீனாவில் தற்போது உள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் ஆயிரத்து 700 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தாக்கம் ஏற்பட்டுள்ளது பரிசோதனையின் மூலம் தெரிய வந்தது.

    இவர்களில் 64.8 சதவீதம் மாணவர்கள் ஓரினச் சேர்கையின் விளைவாக, இந்த நோய் தொற்றிற்கு உள்ளாகியிருப்பதாக சீனாவின் தேசிய சுகாதார மற்றும் குடும்ப கட்டுப்பாடுத் துறை அதிகாரி யு ஜிங்ஜின் தெரிவித்துள்ளார்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக