ஜப்பானை கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கர நிலநடுக்கம் தாக்கியதைத் தொடர்ந்து சுனாமி ஏற்பட்டது. இவை இரண்டின் தாக்குதல் காரணமாக புகுஷிமா அணு உலையிலிருந்து அணுக்கதிர் கசிவு ஏற்பட்டது. அத்துடன் புகுஷிமா அணு உலையின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை இவற்றில் ஒரு தொட்டியில் இருந்து 120 டன் கதிரியக்க நீர் கசிந்தது. கசிந்த நீர் கடல் நீரில் கலக்காது என்று நம்புவதாக டோக்கியா மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மேலும் ஒரு தொட்டியில் இருந்து கதிரியக்க நீர் கசிவு ஏற்பட்டது. இது மிகக் குறைவான அளவே என்று கூறப்படுகிறது.
இந்த அணு உலையை குளிர்விக்க 7 நீர் தொட்டிகள் பூமிக்கு அடியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக