திங்கள், ஏப்ரல் 01, 2013

சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அரபு மொழி பாடம் நீக்கம்! மத்திய அரசின் எதேச்சதிகார நடவடிக்கை!

புதுடெல்லி: அரசு நிர்வாகத்தில் உயர் அதிகாரிகளை தேர்வுச்செய்யும் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் அரபு மொழி பாடம் நீக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புதிய தீர்மானத்தை தொடர்ந்து கடந்த மார்ச் 26-ஆம் தேதி வெளியிட்ட திருத்தப்பட்ட அறிவிக்கையில் சிவில் சர்வீஸ் மெயின் பாடங்களில் இருந்து அரபு மொழியும், இலக்கியமும் நீக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கூடம் முதல்
ஆராய்ச்சி வரை அரபு மொழியை தேர்வுச்செய்யும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சார்ந்த சிறுபான்மை மாணவர்களின் சிவில் சர்வீஸ் கனவுகள் மத்திய அரசின் புதிய முடிவால் கானல் நீராகிவிட்டன.
கடந்த மார்ச் 5-ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில் தவறுகளை திருத்தி மார்ச் 26-ஆம் தேதி யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட அரபு மொழி இடம்பெறாததை தொடர்ந்து மாணவர்கள் இதுத் தொடர்பாக யு.பி.எஸ்.சியிடம் விளக்கம் கேட்டபோது இனி சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் அரபு மொழி இடம் பெறாது என்று பதில் அளிக்கப்பட்டது.
2013-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அரபு மொழியையும், இலக்கியத்தையும் படித்து தயாராகிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு இம்முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இன்னொரு பாடத்தை ஆப்ஷனலாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெறாத வெளிநாட்டு மொழி என்பதால் முதன்மையான தேர்வின் ஏழாவது பேப்பரில் அரபி மொழியை நீக்கியதாக யு.பி.எஸ்.சிக்காக அறிவிக்கை வெளியிட்ட மலாய் முகோபாத்யாய விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில் அரசியல் சாசசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெறாத வெளிநாட்டு மொழியான ஆங்கிலமும், இலக்கியமும் ஆப்ஷனலாக(விருப்ப தேர்வு) சேர்க்கப்பட்டுள்ளது குறித்து முகோபாத்யாயா மெளனம் சாதிக்கிறார்.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறவிருக்கும் சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கு யு.பி.எஸ்.சி தற்பொழுது விண்ணப்பம் கோரியுள்ளது. மெயின் தேர்வில் எழுத்து தேர்வும், நேர்முக தேர்வும் அடங்கும். எழுத்து தேர்வின் 6 மற்றும் 7-வது பேப்பர்கள் 250 மார்க் வீதம் கொண்ட ஆப்ஷனல் மொழிப் பாடங்களாகும். இதில் ஏழாவது பேப்பரில் ஆப்ஷனல் மொழி பாடங்களாக அரபுமொழியும், இலக்கியமும் இடம்பெற்றிருந்தன. அரபு மொழியை தவிர அஸ்ஸாமி, போடோ பெங்காலி, சைனீஸ் டோங்கிரி, ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, கஷ்மீரி, கொங்கிணி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பாலி, பார்ஷி, பஞ்சாபி, ரஷ்யன், சம்ஸ்கிருதம், சந்தாலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, உர்து ஆகியன ஆப்ஷனல் மொழி பாடங்களாகும். இவற்றில் அரபி, சைனீஸ், பிரஞ்சு, ஜெர்மன், பாலி, பார்ஷி, ரஷ்ய மொழிகள் இவ்வாண்டு முதல் நீக்கப்பட்டுள்ளன. இதில் ஆறு மொழிகளும் ஏதேனும் ஒரு தேசத்துடன் தொடர்புடையது. அவற்றுடன் சேர்த்து ஆங்கில மொழியைப் போல உலக மொழியான அதுவும் 20 கோடி முஸ்லிம்களின் மார்க்க மொழியான அரபி நீக்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரபு மொழியில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்புகள் நடக்கின்றன. வட இந்தியாவை தவிர நூற்றுக்கணக்கான அரபு கல்லூரிகள் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ளன. அரபுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அப்ஸலுல் உலமா தேர்வை பல்கலைக்கழகங்களே நடத்துகின்றன. இப்பட்டம் பட்டப்படிப்புக்கு சமமானது. முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திற்கு கொண்டுவர வட இந்திய மதரஸாக்கள் வழங்கும் அரபி படிப்புகளை பட்டப்படிப்புக்கு சமமாக கருத மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மாணவர்களுக்கு அரபு மொழியையும், இலக்கியத்தையும் ஆப்ஷனல் சப்ஜெக்டுகளாக எடுத்து பயின்று சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இது தெளிவான முஸ்லிம் விரோத நடவடிக்கையாகும்.
இதனிடையே மத்திய அரசின் கொள்கை முடிவையே யு.பி.எஸ்.சி பின்பற்றியதாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் துணை செயலாளர் மலாய் முகோபாத்யாயா கூறியுள்ளார். இதுவரை தொடர்ந்த வழக்கத்தை மாற்றிய அறிவிக்கையை ஏன் மூடி மறைத்தீர்கள்? என்ற கேள்விக்கு முகோபாத்யாயா பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக