செவ்வாய், செப்டம்பர் 11, 2012

பாராளுமன்றத்தை கழிவறை போல் கார்ட்டூன் வரைந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் கைது !

தேசத்துரோக வழக்கில் பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே போராட்டம் நடத்தினார். அப்போது ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி கான்பூரைச் சேர்ந்த பிரபல கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதி ஏராளமான கார்ட்டூன்களை வரைந்தார்.அந்த கார்ட்டூன்கள் நம் நாட்டின் தேசிய சின்னத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாகவும், நான்கு சிங்கங்களின் முகங்களுக்கு
பதில் வாயில் ரத்தம் வடியும் ஓநாய்களை வரைந்திருந்ததாகவும், நாடாளுமன்ற கட்டிடத்தை கழிப்பறை போலவும், பாரத மாதாவை மானபங்கம் செய்வது போலவும் கார்ட்டூன்கள் வரைந்திருந்தார் என போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அசீம் திரிவேதி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மும்பை போலீசார் அவரை கடந்த சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை வரும் 16ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை தங்கள் காவலில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கார்ர்ட்டூன் படங்களை இணையதளங்கள் மூலம் வெளியிட்ட அசீம் திரிவேதியின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக