ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி மீது, திரிபுராவில் தாக்குதல் நடத்தப்பட்டது,'' என, அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலர், சுபல் போமிக் கூறினார். திரிபுரா தலைநகர் அகர்தலாவில், நேற்று அவர் கூறியதாவது:மேற்குவங்க மாநில, எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் அபிஜித் முகர்ஜி. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன். இவர், 6ம் தேதி, திரிபுராவின் காலிபஜார் பகுதிக்கு, மாநிலத்தின் முதல் முதல்வரான, சச்சிந்திர லால் சின்கா பெயரில் காரை விட்டு, அபிஜித் இறங்கியதும், அவரின் சட்டை காலரை பிடித்து, காங்கிரஸ் அலுவலகத்திற்குள் இழுத்துச் சென்ற அவர்கள், அங்கு அவரை கடுமையாகத் தாக்கினர். நிறைய பேர் இருந்ததால், அபிஜித்துடன் சென்ற என்னால், ஒன்றும் செய்ய முடியவில்லை. "திரிபுரா மாநில காங்கிரஸ் தலைவர், சுதீப் ராய் பர்மனிடம் அனுமதி கேட்காமல், ஏன் திரிபுரா வந்தாய்' என, கேட்டு, அபிஜித்தை தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக, 7ம் தேதி, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் புகார் தெரிவித்தேன். இவ்வாறு சுபல் போமிக் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக