குவஹாத்தி:அஸ்ஸாமில் கொக்ராஜர் மாவட்டத்தில் கலவரம் உருவாக காரணம் காங்கிரஸ் முதல்வரான தருண் கோகோயின் தவறான கொள்கைகள் ஆகும். 2011-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாரதீய ஜனதாவின் வகுப்புவாத அரசியலுக்கு தடைபோட கோகோய் தானே ஒரு ஹிந்துத்துவா அரசியல் விளையாட்டை ஆடியுள்ளார். முஸ்லிம் வாக்காளர்கள் பத்ருத்தீன் அஜ்மலின் எ.ஐ.யு.டி.எஃபிற்கு வாக்களிப்பதால் ஏற்படும் பின்னடைவை
சமாளிக்க கோகோய் தானே ஹிந்துக்களின் இரட்சகனாக மாறினார். சங்க்பரிவாரம் பிரயோகிக்கும் வார்த்தைகளை விட உணர்ச்சியை தூண்டும் வகையில் தேர்தல் வேளையில் கோகோய் உரையாற்றியதாக முன்னாள் எ.ஐ.யு.டி.எஃப் தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ஹாஃபிஸ் ரஷீத் சவுதரி கூறுகிறார்.
வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை சட்டவிரோத குடியேற்றக்காரர்களாக அறிவிக்கக் கோரி ஆல் அஸ்ஸாம் ஸ்டுடண்ட்ஸ் யூனியனும், பின்னர் அஸ்ஸாம் கணபரிஷத்தும் நடத்திய வன்முறையான போராட்டத்தின் நோக்கங்களை தான் பூர்த்திச் செய்வேன் என்ற வகையில் கோகோயின் உரை அமைந்தது என்று மனித உரிமை ஆர்வலர் டாக்டர். பஷார் கூறுகிறார்.
பழங்குடி மத நம்பிக்கையாளர்களும், கிறிஸ்தவர்களுமான போடோக்களை உபயோகித்து வெளிப்படையாகவே முஸ்லிம்கள் மீதான குரோதத்தை வலுப்படுத்துவதில் கோகோயின் முயற்சி வெற்றிப் பெற்றது. 1987-ஆம் ஆண்டு முதல் போடோக்கள் நடத்திவந்த தீவிரவாத செயல்களை அஸ்ஸாம் அரசுகளும், பா.ஜ.கவும் ஆதரித்தன. வடகிழக்கு மாநிலங்களை பிரித்தாளும் சூழ்ச்சி என்ற சித்தாந்தத்திற்கு உளவுத்துறைகள் தயார்ச் செய்த திரைக்கதையின் அடிப்படையில் மத்திய அரசுகளும், மாநில அரசுகளும் செயல்பட்டன.
2003-ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆளும் பொழுது போடோக்களுடன் எல்.கே.அத்வானியின் ஆதரவுடன் உருவாக்கிய ஒப்பந்தம் ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் ஒத்துவராத அளவுக்கு அநீதமானதாக அமைந்தது. 20 சதவீதம் மக்கள் தொகையை கொண்ட போடோக்களுக்கு 8795 ச.கி.மீ பரப்பளவில் சுயாட்சி வழங்கப்பட்டது.
புதிதாக உருவாக்கப்பட்ட போடோ டெரிட்டோரியல் கவுன்சிலில் மொத்தம் 46 தொகுதிகளில் 30 இடங்களும், 20 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட போடோக்களுக்கு ஒதுக்கபட்டது. தாங்கள் சிறுபான்மையினர் என்பதால் தங்களது ஏகாதிபத்தியத்தை நிலைநாட்ட இனசுத்திகரிப்பு ஒன்றே வழி என போடோக்கள் கருதினர் என்று இடதுசாரி சிந்தனைக் கொண்ட யுனைட்டட் ரெவ்லூஸனரி கவுன்சிலைச் சார்ந்த தேவபத்ரா சுட்டிக்காட்டுகிறார். முஸ்லிம்கள், பழங்குடியினர், ராஜ வம்சத்தினர், ஹிந்துக்கள் ஆகியோர் போடோக்களால் குறிவைக்கப்பட்டனர்.
2003-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி போடோ லிபரேசன் டைகேர்ஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் சில நாட்டுத் துப்பாக்கிகளை மட்டுமே ஒப்படைத்தனர்.
தற்பொழுது நிகழ்ந்த கலவரத்தில் ஏ.கே-47 துப்பாக்கிகளை உபயோகித்ததன் விளைவே முஸ்லிம்களின் மரண எண்ணிக்கை அதிகரிக்க காரணமாகும்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் அரசு பாரபட்சமான முறையில் சுயாட்சி பிரதேசங்களை உருவாக்கியது பிரச்சனை சிக்கலில் ஆழ்த்தியது. ஹிதேஷ்வர் ஸைக்கியா ஏழு சுயாட்சி பிரதேசங்களுக்கு அனுமதி வழங்கினார். கோகோய் பல பகுதிகளிலும் சிறிய எண்ணிக்கையிலான பழங்குடியினருக்கு அளவுக்கு அதிகமான அதிகாரத்தை வழங்கினார். அஸ்ஸாம் மக்கள் தொகையில் 6 சதவீதம் மட்டுமே எண்ணிக்கையை கொண்ட போடோக்கள், காங்கிரஸின் கூட்டணியில் இடம் பெற்றதால் இது எளிதானது.
போடோ லிபரேசன் டைகேர்ஸ் போன்ற நாசவேலைகளில் ஈடுபடும் ஆயுதக் குழுக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தாயகமாக விளங்கு அமைப்புடனான தொடர்புக் குறித்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ஜ.க போடோக்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததும், ஹிந்துத்துவா தீவிரவாதிகள் அஸ்ஸாம் மக்களை இந்திய நகரங்களில் இருந்து வெளியேற்ற எஸ்.எம்.எஸ் வதந்திகளை பரப்பியதும் இதனை உறுதிச் செய்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக