புதுடெல்லி:மதரஸாக்களில் உயர் தரமான கல்வித் திட்டங்களை அமல்படுத்த தேசிய அளவில் குழுவை நியமித்து மத்திய அரசு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் தலைவராகவும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அஹ்மத் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய பள்ளிக்கூட கல்வித்துறை செயலாளர், கூடுதல் செயலாளர், என்.ஐ.ஒ.எஸ் தலைவர்
டாக்டர்.எஸ்.எஸ்.ஜனா, பொதுக்கல்வித்துறை இயக்குநர், பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசு செயலாளர்கள், உஸ்மான் மதனி, பி.எம்.கோயா மாஸ்டர், எஸ்.கே.ஹம்ஸா, கெ.எ.எம்.முஹம்மது அபூபக்கர், மவ்லானா கவுஸர் ஹயாத் கான் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய பள்ளிக்கூட கல்வித்துறை துணைச் செயலாளர் வீரேந்திர சிங் உறுப்பினர் செயலாளராக பதவி வகிப்பார்.
மதரஸா கல்வியை நவீனப்படுத்துவதுக் குறித்து இக்குழு மத்திய அரசுக்கு பரிந்துரைகளை சமர்ப்பித்து மேற்பார்வையிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக