புதன், செப்டம்பர் 12, 2012

தமிழக மக்களுக்கு ஒரு கெட்ட செய்தி: மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கிறது !

 Power Cut Time Likely Increase Tn சென்னை: தமிழகத்தில் தற்போது அமலில் உள்ள மின்வெட்டு நேரம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.தமிழகத்தில் சாதாரண நேரங்களில் 10,000 மெகாவாட்டும், மாலை மற்றும் இரவில் 12,000 மெகாவாட்டும் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 7,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தற்போது கிடைக்கிறது. இதனால் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை சமாளிக்க சென்னையில் 1 மணிநேரமும் மாநிலத்தின் பிற பகுதிகளில் கூடுதல் நேரமும் மின்தடை
செய்யப்படுகிறது.காற்றாலைகள் மூலம் அதிகபட்சம் 2,500 முதல் 4,000 மெகாவாட் வரை மின்சாரம் கிடைக்கிறது. இதனால் மின்வெட்டு ஓரளவு குறைந்துள்ள நிலையில் இந்த மாத இறுதியுடன் காற்று சீசன் முடிகிறது. இனி வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் காற்றின் வேகம் அதிகரித்து சீசன் துவங்கும். இதனால் இன்னும் சில வாரங்களில் மின்வெட்டு நேரம் அதிகரி்க்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மி்ன்சாரமும் குறைந்த அளவு தான் கிடைக்கிறது. மத்திய தொகுப்பில் உள்ள ஆந்திர மாநிலம் சிம்காத்ரி, ராமகுண்டம், ஒடிசா மாநிலம் தல்சேர், நெய்வேலி ஆகிய அனல் மின் நிலையங்கள், கல்பாக்கம் அணு மின் நிலையம், கர்நாடக மாநிலம் கைகா அணு மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து தமிழகத்திற்கு 2,481 மெகாவாட் மின்சாரம் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போது 1,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது.
இந்நிலையில் வடசென்னை வள்ளூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்க கால தாமதம் ஆகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கினால் மின்தட்டுப்பாடு பெருமளவில் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் அங்கு போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இவ்வாறு திரும்பும் திசையெல்லாம் மின்தட்டுப்பாடாக இருக்கும் நிலையில் காற்றாலை மின்சாரம் ஓரளவுக்கு கை கொடுத்து வருகிறது. ஆனால் அதுவும் இம்மாத இறுதியில் குறைந்துவிடும் என்பதால் மின்தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
இதனால் இன்னும் சில வாரங்களில் பல மணிநேர மின்வெட்டு அமலுக்கு வரும் சூழல் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக