செவ்வாய், செப்டம்பர் 11, 2012

லேப்டாப் கண்டுபிடித்தவர் புற்றுநோயால் மரணம். . .

லேப்டாப்பை கண்டுபிடித்த இங்கிலாந்து விஞ்ஞானி பில் மாக்ரிட்ஜ், புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. லண்டனில் 1943,ல் பிறந்தவர் பில் மாக்ரிட்ஜ். இண்டஸ்ட்ரியல் டிசைனிங் படிப்பு முடித்து அமெரிக்கா சென்றார். மினி கம்ப்யூட்டர் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்ட அவர் ‘கிரிட் சிஸ்டம்ஸ்’ என்ற நிறுவனத்துக்காக
மினி கம்ப்யூட்டரை 1979,ல் உருவாக்கினார். ‘கிரிட் காம்பஸ்’ என்று அதற்கு பெயரிடப்பட்டது. 1982,ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அமெரிக்க ராணுவம் மற்றும் நாசாவில் பயன்படுத்தப்பட்டது. 1985,ல் டிஸ்கவரி விண்கலத்தில் அனுப்பப்பட்டது. பின்னர் வெளி சந்தையிலும் விற்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, அதன் விலை ரூ.4.50 லட்சம். கையடக்க வீடியோகேமில் இருப்பது போன்ற திரை, டைப்ரைட்டர் பட்டன்கள் போன்ற கீபோர்டு இருந்தன.
கிரிட் ஓஎஸ் என்ற பிரத்யேக ஆபரேஷன் சிஸ்டத்தில் இயங்கியது. இதுதான் முதல் லேப்டாப்பாக கருதப்படுகிறது. 2010,ல் நியூயார்க்கில் உள்ள கூப்பர் ஹெவிட் தேசிய டிசைன் அருங்காட்சியக இயக்குனராக பொறுப்பேற்றார். டிசைனிங் துறையில் சாதனைகள் படைத்ததற்காக பல்வேறு விருதுகள், பதக்கங்களை பெற்ற பில் மாக்ரிட்ஜ், புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்றும் பலனின்றி கடந்த 8,ம் தேதி இறந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக