டமாஸ்கஸ்:சிரியா தலைநகரான டமாஸ்கஸில் அகதிகள் தங்கியிருக்கும் மாவட்டங்களில் பஷாருல் ஆஸாதின் ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளது. டமாஸ்கஸின் தெற்கு அண்மைப் பகுதியில் தாக்குதலை ராணுவம் தீவிரப்படுத்தியதால் எதிர்ப்பாளர்கள் ஃபலஸ்தீன் அகதிகள் தங்கியிருக்கும் பகுதிக்கு நகர்ந்ததாக தகவல் வெளியானது. எதிர்ப்பாளர்களை பின்தொடர்ந்த ராணுவம் தாக்குதலை நடத்தியது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தாக்குதல்
நிகழ்வதாகவும், சிவிலியன்கள் கூட்டாக படுகொலைச் செய்யப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது எனவும் சமூக ஆர்வலர் அபூ யாஸின் அல்ஸாமி கூறுகிறார்.
வெள்ளிக்கிழமை இரவு ஃபலஸ்தீன் மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இங்கிருந்து மக்கள் கூட்டாக புலன்பெயருகின்றனர். யர்முக் முகாமில் அல்பாஸில் மருத்துவமனைக்குள் நுழைந்த ராணுவம் காயமடைந்த ஏராளமான சிவிலியன்களை கைது செய்தது. ஹஜருல் அஸ்வத் மாவட்டத்தில் தீவிரமான வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
வெள்ளிக்கிழமை சிரியாவில் 170 பேர் பலியாகியுள்ளனர். ஃபலஸ்தீன் மக்களில் பஷாரைஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் உள்ளனர். ஆனால், பெரும்பாலோர் எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாளர்கள் ஆவர்.
இதனிடையே, மலேசியாவில் இரண்டு சிரியா பிரதிநிதிகள் எதிர்ப்பாளர்கள் பக்கம்அணி மாறியுள்ளனர். கோலாலம்பூரின் சிரியா தூதர் இமாத் அல் அஹ்மர், தூதரக அதிகாரி அட்டாஷே மஹ்மூத் உபைத் ஆகியோர் அணி மாறியவர்கள் ஆவர். சுதந்திரம் கோரும் மக்களை கொடூரமாக அடக்கி ஒடுக்குவதைக் கண்டித்து இம்முடிவை எடுத்துள்ளதாக இருவரும் கெய்ரோவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக