கார்த்தூம்:சூடானில் ராணுவத்திற்கும், தர்ஃபூர் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் 32 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். மோதலில் சில ராணுவ வீரர்களும் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன. தெற்கு சூடானின் எல்லையையொட்டிய கொர்டோஃபானில் இம்மோதல் நிகழ்ந்துள்ளது. சூடான் அதிபர் உமருல் பஷீர் பதவி விலக கோரி நாட்டில் கிளர்ச்சியில் ஈடுபடுவோரை
மேற்கத்திய நாடுகளும், தெற்கு சூடானும் ஆதரிப்பதாக சூடான் குற்றம் சாட்டுகிறது. ஆனால், இதனை மறுக்கும் தெற்குசூடான், தங்களது நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவ சூடான் முயற்சிப்பதாக குற்றம் சாட்டுகிறது.
வன்முறைகளை நிறுத்திவிட்டு அமைதி முயற்சிகளுக்கு வலு சேர்க்க வேண்டும் என்று சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் அமெரிக்கா அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் தர்ஃபூரில் மோதல் நிகழ்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக