திங்கள், செப்டம்பர் 10, 2012

முஸ்லிம்கள் குறித்து வெறுப்பை உமிழும் தருண் கோகோய்: பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் கரண் தாப்பர் !

Tarun and Karanபுதுடெல்லி:மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவியவர்கள் என குற்றம் சாட்டி இனப் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்ட போடோ பிரிவினைவாதிகளைஅடக்கி ஒடுக்க துப்பில்லாத காங். முதல்வர் தருண் கோகோய் தனது ஹிந்துத்துவா முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான சி.என்.என் – ஐ.பி.என்னில்  ‘டெவில்ஸ் அட்வகேட்’
என்ற நிகழ்ச்சியில் வகையில் கரண் தாப்பர்; பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் வகையில் தனது முஸ்லிம்கள் குறித்த காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் கேள்வியை தருண் கோகோயை நோக்கி தொடுத்த வேளையில் முஸ்லிம்கள் தங்களது அறிவின்மையால் குழந்தைகளை பெற்றுத் தள்ளுகிறார்கள் என்ற அநாகரீகமான ஹிந்துத்துவா சக்திகளின் அசிங்கமான குற்றச்சாட்டை பிரதிபலிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் அவர்.
கரண் தாப்பரின் கேள்வியும், தருண் கோகோயின் முஸ்லிம்கள் மீதான வெறுப்பை உமிழும் பதிலும்:
கரண் தாப்பர்: அஸ்ஸாமில் சில மாவட்டங்களில் இந்துக்களை விட முஸ்லீம்கள் அதிக அளவில் பெருகியுள்ளனர்.  குறிப்பாக கோக்ரஜாரில் 19 சதவீத அளவுக்கு முஸ்லீம்கள் அதிகரித்துள்ளனர்.  டுப்ரியில் 29 சதவீதஅளவிலும்,  போங்கய்கானில் 31 சதவீத அளவிலும் முஸ்லீம்கள் அதிகரித்துள்ளனர்.  இது இயற்கையான அதிகரிப்பாக இருக்க வாய்ப்பில்லை.  வங்கதேசத்திலிருந்து  இடம் பெயர்ந்து வந்ததன் விளைவாகவே இது இருக்க முடியும். இதுபற்றி உங்களது கருத்து.
தருண் கோகோய்: இது படிப்பறிவின்மையால் வந்தது. இங்குள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர் படிப்பறிவில்லாதவர்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் 6, 7,8, 9, 10 என்று உறுப்பினர்கள் உள்ளனர். இதெல்லாம் படிப்பறிவி்ன்மையால் ஏற்படும் விளைவுகள்.
கரண் தாப்பர்: படிப்பறிவில்லாததால் தான் முஸ்லீம்கள் அதிக அளவில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று நீங்கள் கூறுகிறீர்களா…?
தருண் கோகோய்: ஆமாம்.
கரண் தாப்பர்: நீங்கள் சொல்வதன் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறதா?
தருண் கோகோய்: ஆமாம், படிப்பறிவில்லாததால்தான் இந்த நிலை ஏற்படுகிறது.
கரண் தாப்பர்: முதல்வர் அவகர்களே இது மிகவும் சர்ச்சைக்குரிய கருத்து.  உங்களது கருத்தைப் பார்த்தால், படிப்பறிவில்லாதவர்கள் அதிக அளவில் குழந்தைகளைப் பெறுவதில் கவனமாக உள்ளனர் என்பது போல மக்கள் நினைக்கக் கூடும்.
தருண் கோகோய்: 100 சதவீதம் எனது கருத்தில் நான் உடன்பாடு கொண்டுள்ளேன்
என்று கூறியுள்ளார் கோகோய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக