வெள்ளி, செப்டம்பர் 07, 2012

குழந்தைகளின் நலனுக்காக கணவர் அடிப்பதை மனைவி பொறுத்துக்கொள்ள வேண்டும். அறிவுரை வழங்கிய நீதிபதிக்கு கண்டனம் !

மண விலக்கு வழக்கு தொடுத்த பெண்ணிடம், கணவர் அடிப்பதை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கிய கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதியை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று செயற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.ஒரு ஆண்மகன் தனது மனைவியை ஒழுங்காக கவனித்துக் கொள்ளும் பட்சத்தில், அவர் தனது மனைவியை அடிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான் என நீதிபதி கே பக்தவச்சலா கூறியிருந்தார். குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கணவருடன் ஒத்துப் போக வேண்டும் என்றும் அந்தப் பெண்ணுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்
.
அதேநேரம் வீட்டில் நடக்கும் வன்முறையை தான் ஆதரிக்கவில்லை என்றும், ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அர்த்தத்தில் தான் கருத்து கூறியிருக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட நீதிபதி கூறியுள்ளார்.
ஆனால் இந்த நீதிபதி வேறு சில வழக்குகளிலும் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருப்பதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக