மேற்குவங்க மாநிலம் பங்குரா மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி பலியான ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 12 பயணிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மற்ற பயணிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தின் சீற்றம் அதிகமாக இருப்பதால், பஸ்சில் பயணம் செய்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஜர்கிராம் பகுதியிலிருந்து துர்காபூர் நோக்கி சென்று கொண்டிருந்த இந்த பஸ், பைரவ் பகி நதியைக் கடந்து சென்றபோது நதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக