திங்கள், செப்டம்பர் 10, 2012

ஒரு வருடத்தில் பிரதமரின் சொத்துமதிப்பு 2 மடங்காக உயர்வு !

புதுடெல்லி:இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கின் சொத்து மதிப்பு 2 மடங்காக உயர்ந்துள்ளது. 2011-12 காலக்கட்டத்தில் அவருடைய சொத்து மதிப்பு 10.78 கோடி ரூபாய் என்று நேற்று முன்தினம் மன்மோகன் தெரிவித்திருந்தார். இது கடந்த ஆண்டை விட 100 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு 5.10 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என்று மன்மோகன்சிங் கூறியிருந்தார். புதிய புள்ளிவிபரப்படி ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மத்திய செக்ரட்டரியேட் கிளையில் பிரதமருக்கு நிலையான முதலீடு 2.35 கோடி
ரூபாய் ஆகும். சட்டீஷ்கர் வீட்டிற்கு 4.74 கோடி ரூபாய் மதிப்பும், வசந்த்குஞ்சில் ஃப்ளாட்டிற்கு 2.35 கோடி ரூபாய் மதிப்பும் ஆகும். இதர சொத்துக்களின் மதிப்பு 58 லட்சம் ரூபாய் ஆகும். இரண்டு வீடுகளுக்கும் அரசு நிர்ணயம் செய்த சந்தை மதிப்பு கடந்த ஆண்டை விட உயர்ந்ததே பிரதமரின் சொத்து மதிப்பு  2 மடங்காக உயரக் காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்தஆண்டு சட்டீஷ்கரில் உள்ள வீட்டிற்கு 90 லட்சம் ரூபாயும், வசந்த்குஞ்ச் ஃப்ளாட்டிற்கு 88.67 லட்சம் ரூபாயும் சந்தை மதிப்பாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
அதேவேளையில் பிரதமரின் அமைச்சரவை சகாக்கள் பலருக்கு பிரதமரை விட சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக