திங்கள், செப்டம்பர் 10, 2012

நிலக்கரி சுரங்க ஊழல்: பா.ஜ.க தலையும் உருளுகிறது !

BJP involved in coal scamபுதுடெல்லி:நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமாச் செய்யக்கோரி பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டது. இதனால் பாராளுமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் எதுவும் விவாதிக்கப்படாமலேயே 13 நாட்கள் கூட்டத் தொடர் முடங்கிப் போனது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய
தலைவர் நிதின்கட்கரியின் நெருங்கிய நண்பர் அஜய் சஞ்சேத்தியும் லாபம்அடைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் கூறுகையில்,
பாஜக தலைவர் கட்காரியின் பிசினஸ் பார்ட்னர் அஜய்சன்செட்டி சத்தீஸ்கரில் உள்ள நிலக்கரி சுரங்கங்கள் மூலம் ரூ.490 கோடி லாபம் சம்பாதித்துள்ளார்.  சத்தீஸ்கர் சுரங்க மேம்பாட்டு கழகமும், அஜய் சன் செட்டியும் சேர்ந்து சத்தீஸ்கரில் சுரங்க வியாபாரம் செய்தனர். அதில் கிடைத்த ரூ.1,000 கோடி லாபத்தில் அஜய்க்கு ரூ.490 கோடி கிடைத்தது என்றார்.
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி புரிந்த 2004 காலக்கட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஏலத்தில் விடுவதற்கான கொள்கையை முன் வைத்தபொழுது அக்கட்சி ஆட்சி புரியும் சட்டீஷ்கர், மத்தியபிரதேச மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் அனுப்பியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்நிலையில் தம்மை பரிசுத்தவானாக காட்டிக்கொண்டு சுய அரசியல் ஆதாயத்திற்காக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தை அமளியின் மூலமாக முடக்கி கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளது. தற்பொழுது நிதின்கட்கரியின் நெருங்கிய நண்பருக்கும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் ஆதாயம் கிடைத்திருப்பது அம்பலமாகியுள்ளது பாரதீய ஜனதா கட்சியின் மேலும் வெளிப்படுத்தியுள்ளது.
இதைத்தான் “திருடன் கையில் கொட்டிய தேள்” என்பார்களோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக