வியாழன், செப்டம்பர் 06, 2012

அஸ்ஸாம்:1993-ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அகதிகள் முகாமில் அவதியுறும் அவலம் !

1993-ஆம் ஆண்டு கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களும் அகதிகள் முகாமில் அவதியுறும் அவலம்புதுடெல்லி:1993-ஆம் ஆண்டு போடோ பயங்கரவாதிகளின் தாக்குதலில் எல்லாவற்றையும் இழந்தவர்களில் 180 பேர் தற்பொழுதும் அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் அவலம் அஸ்ஸாமில் நிலவுகிறது.  கடந்த ஜூலை மாதம் துவங்கிய கலவரத்தில் நான்கரை லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். குபிரி-பிலாஸ்புரா பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் இவர்கள் 1993-ஆம் ஆண்டைய கலவரத்தில்
பாதிக்கப்பட்ட 180 பேர் தங்கியுள்ளனர்.
பிரதேசத்தின் உள் பகுதியில் உருவாக்கப்பட்ட முகாம்களில் கடந்த 20 ஆண்டுகளாக சிரமங்களுக்கு இடையே இவர்கள் தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றனர். நேற்று முன்தினம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய சில தன்னார்வ தொண்டர்கள் இத்தகவலை தெரிவிக்கின்றனர்.
ஜூலை மாதம் துவங்கிய கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களும் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். ஆடைகள் போதுமான அளவு முகாம்களில் வந்தடைந்துள்ளன. ஆனால், மருந்தும், உணவும் தேவைக்கு இல்லை. டாக்டர்கள் குழு வருகை தருவார்கள் என கூறப்பட்டது. ஆனால் வரவில்லை. ஊட்டச்சத்துக் குறைவும் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. வாகனங்கள் எளிதாக சென்றடையும் முகாம்களில் மட்டுமே நிவாரணப் பொருட்கள் சென்றடைகின்றன. ஊரின் உள் புறங்களில் அமைந்துள்ள முகாம்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் சென்றடைவதில்லை.
பார்வையிடச் செல்லும் தலைவர்களும் உள் பகுதிகளில் இருக்கும் அகதிகள் முகாமிற்கு செல்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
போடோக்களின் தாக்குதலுக்கு அஞ்சி, போலீஸ் பலத்த பாதுகாப்புடன் நிவாரண பணிகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்களை அழைத்துச் செல்கிறது. உதவிகள் கேரள மாநிலத்தில் இருந்துதான் அதிகமாக வந்தடைகிறது.
இதர மாநிலங்களில் இருந்து பல்வேறு குழுக்கள் நிவாரண உதவிகளை வழங்க வருகை தருகின்றனர். இதனால் போலீஸ் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து சென்ற 22 நபர்கள் அடங்கிய குழுவை போலீஸ் தடுத்து வைத்தது. பல்வேறு மதத்தைச் சார்ந்தவர்கள் அடங்கிய குழுவினரின் நோக்கம் குறித்து ஏற்பட்ட சந்தேகமே இதற்கு காரணம். மலையாள பத்திரிகைகளில் வரும் செய்திகளை கண்ணும் கருத்துமாக கண்காணிக்கும் இண்டலிஜன்ஸ் பீரோவின் தகவல்களும் இதற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அஸ்ஸாம் பிரச்சனைகளை உலகிற்கு அறிவிக்க முயல்வோருக்கு எதிராக போடோக்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க கோரி எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்த கேரளாவில் வசிக்கும் அஸ்ஸாமைச் சார்ந்த இளைஞரை போடோக்கள் ஹிட் லிஸ்டில் சேர்த்துள்ளனர். இத்தகவலை அவரது நண்பர் தேஜஸ் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடந்த 1993-ஆம் ஆண்டு முதலே களத்தில் உள்ள இவருக்கு கூடுதல் டி.ஜி.பியின் உத்தரவின் பேரில் 4 கமாண்டோக்கள் அடங்கிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை அவர் தேஜஸ் பத்திரிகைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக