
இந்நிலையில் சிவசேனாவின் செயல் தலைவரான உத்தவ் தாக்கரே, பீகார் மாநில மக்கள் தங்களைக் குறித்த விபரங்களை பதிவுச் செய்த பின்னரே மும்பையில் நுழையவேண்டும் என தமது சாம்னா பத்திரிகையில் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் ஜேம்ஸ் குவாத்ரேஸ் என்பவர், இருவருக்கும் ( ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே) எதிராக பகல்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எஸ்.பி. மாள்வியா முன்னர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பது: ”பீகார் மாநிலத்தவர்கள் தொடர்பாக இந்த இரண்டு கட்சித் தலைவர்களும் தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய இறையாண்மைக்கும் விரோதமாகவும், ஒற்றுமையைக் குலைக்கும் விதமாகவும் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வழக்குரைஞர் சுதிர் என்பவர் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் எஸ்.பி. சிங் முன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அதில், “பீகார் மாநிலத்து மக்கள் மஹராஷ்ட்ரா வருவதற்கு முன்அனுமதி பெற வேண்டும் என்று கூறியிருப்பது பீகார் மக்களை மிகவும் பாதித்துள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், மஹாராஷ்டிர நவநிர்மாண் கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மற்றும் சிவசேனை கட்சியின் செயல் தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக