‘ஆருஷி கொலையின் பின்னணியில் மர்மம்: துரதிர்ஷ்டசாலியான ஓர் தாயின் கதை’ என்ற பெயரில் தற்பொழுது காஸியாபாத்தில் உள்ள தஸ்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூபுர் எழுதுகிறார்.
நூபுர் எப்பொழுதும் எழுதுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் என்றும், ஆருஷி கொலையில் உண்மையை பொதுமக்கள் அறியவேண்டும் என்ற ஆவலில் அவர்நூல் எழுதுவதாகவும் தஸ்னா சிறை சூப்பிரண்ட் விரேஷ் ராஜ் சர்மா கூறுகிறார்.
நூலை வெளியிட அவர் அனுமதி கோரியுள்ளார். நீதிமன்றம் இதற்கு அனுமதி வழங்கும் என நம்புவதாக சர்மா தெரிவித்தார்.
அதேவேளையில் நூபுரின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. தனக்கும், தனது கணவர் ராஜேஷ் தல்வாருக்கும் எதிரான விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்துச்செய்ய நூபுர் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
2008 மே மாதம் ஆருஷி நொய்டாவில் உள்ள வீட்டின் உள் பகுதியில் கொலைச் செய்யப்பட்டு கிடந்தார். அடுத்த நாள் வீட்டு வேலைக்காரரான ஹேம்ராஜின் உடல் வீட்டின் மாடியில் காணப்பட்டது. இதனிடையே, ஆருஷி-ஹேம்ராஜ் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமை துவங்க செசன்ஸ் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக