வெள்ளி, மே 11, 2012

ஹரியானா:அரசு பணியாளர்களுக்கு ஜீன்ஸ், டீசர்ட் அணிய தடை!

ஹரியானா:ஹரியானா மாநிலத்தில் அரசு மகளிர்-குழந்தைகள் நலத்துறையில் பணியாற்றும் நபர்கள் ஜீன்ஸ், டீசர்ட் அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கண்ணியமான ஆடையை அணியவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல்18-ஆம் தேதி மகளிர்-குழந்தைகள் நலதுறை இயக்குநர் வெளியிட்ட அறிவிக்கையில், ஆண்கள் ஃபேண்டும், சர்ட்டும் அணியவேண்டும். பெண்கள் சேலையோ அல்லது சுடிதாரோ அணியவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களுக்கு சுடிதாருடன் ஷால் கட்டாயமாகும். இண்டக்ரேட்டட் சைல்ட் டெவலப்மெண்ட் ஸ்கீம் மற்றும் இண்டக்ரேட்டட் சைல்ட் ப்ரொடக்சன் ஸ்கீம் ஆகியவற்றின் பணியாளர்களுக்கு இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கைக்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா பூக்கால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக