இமயமலையின் மிக உயரமான பனி படர்ந்த மலைப் பகுதியில் சியாச்சின் உள்ளது. இது இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. குளிர் பிரதேசமான இங்கு இரு நாட்டு ராணுவமும் முகாம்களை அமைத்துள்ளது. கடந்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி சியாச்சின் மலை பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. அதில் பாகிஸ்தான் ராணுவ முகாம் சிக்கி பனிக் கட்டிகளால் மூடியது. இதில் 139 பாகிஸ்தான் வீரர்கள் பலியாகினர். அவர்களில் பலரது உடல்கள் இன்னும் மீட்கப்படவில்லை.
எனவே, மிகவும் ஆபத்தான பகுதியான சியாசினில் இருந்து ராணுவம் வாபஸ் பெறப்பட வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி பர்வேஷ் கியானி கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாகிஸ்தான் ராணுவ மந்திரி சவுத்ரி அகமது முக்தார் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:-
தற்போதுள்ள சூழ்நிலையில் சியாச்சின் பிரச்சினையை தீர்க்க முடியாது. எனவேதான் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் முகாம்களை அமைத்துள்ளது. அதில், இந்தியா மிக உயரமான இடத்தில் தனது ராணுவ முகாமை அமைத்து வீரர்களை குவித்து வைத்துள்ளது. இந்த நிலையில் சியாசினில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தை வாபஸ் பெற முடியாது. மேலும் ராணுவத்தை வாபஸ் பெற்றால் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்புவார்கள் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக